என்னால் செய்ய முடியாததை என் மகள் செய்துவிட்டாள்..!! மகிழ்ச்சியில் பிரபல நடிகை..!!


பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மீனா தன்னால் செய்ய முடியாத ஒன்றை தன் மகள் செய்துவிட்டதாக கூறி நெகிழ்ச்சி அடைந்துள்ளார். விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இணைந்து நடித்திருந்த படம் ப்ரண்ட்ஸ். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சித்திக் இயக்கியிருந்தார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இந்த படத்தில் முதலில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், சூர்யாவுக்கு ஜோடியாக சுவலக்ஷமியும் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் நாயகிகள் மாற்றப்பட்டனர்.


இந்நிலையில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மீனா பின்வருமாறு பேசினார், என் மகள் சித்திக் இயக்கத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷம். இவர் இதற்கு முன் விஜய்யை வைத்து இயக்கிய ப்ரண்ட்ஸ் படத்தில் கால்ஷீட் பிரச்சனையால் என்னால் நடிக்க முடியாமல் போனது.

அதை நினைத்தால் இப்போதும் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் இப்போது அவருடைய படத்தில் என் மகள் நடித்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னால் செய்ய முடியாமல் போன ஒரு விஷயத்தை என் மகள் செய்துவிட்டாள் என நெகிழ்ச்சியாய் பேசினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!