அஜித்தின் வலிமை படத்தின் படப்பிடிப்பு பற்றி வந்த அப்டேட்- எங்கே, எப்போது தொடக்கம்?

அஜித் நடிப்பில் கடந்த வருடம் மட்டும் 2 படங்கள் வந்தன. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்.

அதே வேகத்தில் தனது அடுத்த படத்தையும் முடிவு செய்து நடிக்கவும் தொடங்கினார் அஜித். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து வர இடையில் கொரோனா வந்து அனைத்தையும் நிறுத்திவிட்டது.

படப்பிடிப்பு கடந்த 6 மாதங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் எப்போது படப்பிடிப்பு என தகவல் வரவில்லை என ரசிகர்கள் வருத்தமாக இருந்தனர்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க முடிவு செய்ததையெல்லாம் இந்தியாவிலேயே எடுக்க இப்போது பிளான்கள் போட்டுள்ளார்களாம்.

சோ தல பேன்ஸ் கெட் ரெடி பார் அப்டேட்ஸ்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!