சூரரை போற்று திரைப்படம் குறித்து வெளியான முதல் விமர்சனம், பிரபல தயாரிப்பாளர் அளித்த பேட்டி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் சூரரைப் போற்று.

இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்கள் இயக்க சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி OTT அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சூர்யா.

இதற்கு திரையுலகை சேர்ந்த முக்கியமாக பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் இப்படத்தின் ப்ரீவியூ ஷோவும் சமீபத்தில் நடந்துள்ளது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான டி. சிவா ஒரு பேட்டியில் “எனக்கு தெரிந்த மிக பெரிய இயக்குனர் ஒருவர், சூரரைப் போற்று திரைப்படத்தை பார்த்துவிட்டு லைப் டைம்-ல் இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததில்லை என என்னிடம் கூறினார்” என்று டி. சிவா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!