கொரோனாவால் திலீப் வழக்கு தாமதம்

கொரோனா ஊரடங்கினால் திலீப் வழக்கின் விசாரணை மேலும் தாமதமாகும் என கூறப்படுகிறது.

கேரளாவில் பிரபல நடிகையை 2017-ல் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக கைதாகி கொச்சி ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டு 85 நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வந்தார்.

இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையை 6 மாதத்துக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த நவம்பர் மாதம் உத்தரவிட்டது. திலீப் விவாகரத்து செய்த முதல் மனைவி மஞ்சுவாரியர், ரம்யா நம்பீசன் உள்பட பலர் சாட்சியம் அளித்தனர்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும் எனவே மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹனி எம்.வர்கீஸ் உச்சநீதிமன்றத்துக்கு மனு அனுப்பி உள்ளார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!