தோல்விகளை கடக்க எனக்கு சொல்லி கொடுத்த பெயர், தல அஜித் குறித்து பிரபல நடிகரின் பதிவு

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவருக்கு சினிமா துறையிலுள்ள நடிகர்களும் ரசிகர்களாக உள்ளனர்.

மேலும் இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பும் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவரின் ரசிகர்கள் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast, #28YrsOfAjithism என்ற ஹேஷ்டேகுகளை இப்போதே ட்ரெண்ட் செய்து, இதற்காக CDP போஸ்டர்களை உருவாக்கி, பிரபலங்கள் மூலமாக வெளியிட்டுள்ளனர்.

அந்த வரிசையில் நடிகர் பிரசன்னாவும் CDP யை வெளியிட்ட தல அஜித் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதில் “நடிகராக வேண்டும் என்ற என்னுடைய கனவை வலுப்படுத்திய ஒரு பெயர், என்னை நானே செதுக்கிக் கொள்ளக் கற்றுக்கொடுத்த ஒரு பெயர், தோல்விகளைக் கடக்க எனக்குச் சொல்லிக் கொடுத்த ஒரு பெயர்,

கடினமான காலங்களில் என்னைத் தாங்கிப் பிடித்த ஒரு பெயர், பின்வாங்கி விடாத ஒரு போராளியாக என்னை மாற்றும் ஒரு பெயர்” என இவர் பதிவிட்டுள்ளது தல அஜித் ரசிகர்களை குஷியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!