விஜய், அஜித் பட இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி.. கதாநாயகி யார் தெரியுமா?

தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தற்போது முன்னணியில் இருந்து வருகிறார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

ஆம் பிட்சா, சூது கவ்வும், தர்மதுறை, ஆரஞ்சு மிட்டாய், ஆண்டவன் கட்டளை என பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஹீரோவாக மட்டுமல்லாமல் விக்ரம் வேதா, பேட்ட ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.

தற்போது தளபதி விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் கைவசம் லாபம், துகளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மற்றும் பல படங்களை வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு படத்தில் கம்மிட்டாகி வுள்ளராம் விஜய் சேதுபதி.

இப்படத்தை அஜித்தை வைத்து கீரிடம், விஜய்யை வைத்து தலைவா ஆகிய படங்களை எடுத்த ஏ.எல். விஜய் இயக்க போகிறாராம்.

மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிரபல நடிகை அனுஷ்கா நடிக்க போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

மேலும் இதனை குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!