வலிமை படத்தின் சம்பள விவகாரம்.. உடனடி முடிவு எடுத்த தல அஜித்..

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் அமைந்துள்ளது.

இதனால் தல அஜித்தின் ரசிகர்கள் லட்சகாகான பேர் படத்திற்காக ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக சற்று தள்ளிப்போய் வுள்ளது.

மேலும் கொரோனா தாக்கம் முழுமையாக ஆடங்கிய பிறகு தான் வலிமை படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தல அஜித் தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்ததாக தெரியவந்தது.

இந்நிலையில் கொரோனாவல் திரையுலகிற்கு பல நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் உட்பட பல நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தயாரிப்பார்கள் கோரிக்கை கூறினார்.

இதனால் வலிமை படத்தின் சம்பளத்திற்கு தல அஜித் முடிவு ஒன்றை எடுத்துள்ளராம். ஆம் தல அஜித் வலிமை பட சம்பள விவகாரத்தில் தானாகவே முன்வந்து போனி கபூருக்கு சம்பளத்தை பற்றி மெயில் அனுப்பி விட்டாராம்.

படத்தின் வெளியீடு எப்போது என்பதை முடிவு செய்து அப்போதைய சூழ்நிலையை கணித்து சம்பளத்தை குறைப்பது பற்றி பேசிக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டாராம் அஜித் என தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!