தொகுப்பாளினி திடீர் மதம் மாற்றமா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


பிரபல தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளராக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை பிடித்திருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் ஹுசைன் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார்.

இவர் தற்போது மதம் மாறியுள்ளதாகவும், அவரது பெயரை மாற்றிக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது: எனக்கு மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.


யாரும் என்னை கட்டாய படுத்தவும் இல்லை. என் கணவர் அவரின் மதம் சார்ந்த கோவிலுக்கு அழைத்து போனால் நான் அங்கு சேவை செய்வேன்.

மேலும், எனக்கு அப்பா அம்மா அழகான பெயர் வைத்துள்ளார்கள். நான் எதற்காகவும் என் பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என கூறியுள்ளார். இவர்களை குறித்து தேவையற்ற வதந்திகள் வெளியாகிக் கொண்டே தான் இருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!