அம்மாடியோவ்… திருக்குறளுக்கு மீனிங் கேட்ட சீரியல் நடிகை..!! என்ன கொடுமைடா..!!


சன்டிவியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் வில்லியாக நடிக்கும் லேகாவிற்கு திருக்குறள் என்றால் என்ன என்று தெரியவில்லை. அதை விட அவர்… யு டெல் மீ… முதல்ல எனக்கு மீனிங் சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு தொகுப்பாளர் ஆதவன் கொடுத்த விளக்கம் அதை விட கொடுமை.

பத்தாண்டுகளுக்கு முன் வெளியான ஒரு தமிழ் படத்தில் டிவி தொகுப்பாளினிகளை கிண்டல் செய்திருப்பார் நடிகர் விவேக். அதேபோலத்தான் இப்போது சீரியல் நடிகைகளின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ரியாலிட்டி ஷோவில் பங்கேற்கும் சீரியல் நடிகைகளின் பேச்சும், செயல்பாடுகளும் தமிழ் மொழியையும், தமிழ் அறிஞர்களையும் கேவலப்படுத்துவது போலவே அமைந்துள்ளது.

சவாலே சமாளி..
சன்டிவி சீரியல் குடும்பம்

சன்டிவியில் ஞாயிறு தோறும் சவாலே சமாளி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். கடந்த 3ஆம் தேதி ஒளிபரப்பான சவாலே சமாளி நிகழ்ச்சியில் சந்திரலேகா சீரியல் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


சந்திரலேகா சீரியல்
வில்லி லேகா

சந்திரலேகாவில் வில்லியாக நடிக்கும் லேகாவின் செயல்பாடுகள் கொடூரமானவை. தமிழ் பேச வராத நடிகை… தமிழே தெரியாத நடிகை என்பதால் டப்பிங்கில் சமாளித்து விடுகின்றனர். ஆனால் ரியாலிட்டி ஷோக்களில் அவர்களின் பேச்சை கேட்கும் போது அடேய்… ஏன் இந்த கொலைவெறி என்றாகிவிடுகிறது.

வந்த மலை…
அதென்ன தண்டனை

சவாலே சமாளி நிகழ்ச்சியில் வந்தா மலை என்ற பகுதியில் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னால் பாயிண்ட். அதே நேரத்தில் தவறாகி விட்டால் அந்த டீம் காரர்களின் கால்களில் உள்ள ரோமத்தை பறிக்கிறார்கள். என்ன போட்டியோ? என்ன தண்டனையோ?

திருக்குறளில் நான்கு பால் சரியா? தவறா?
திருக்குறள் மீனிங் சொல்லுங்க

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

திருக்குறளில் நான்கு பால்கள் இருக்கின்றன… சரியா? தவறா? என்று கேட்டார் தொகுப்பாளர் ஆதவன். அதற்கு நடிகை லேகாவும், சந்திராவும் திரு திரு என்று விழித்தனர். அப்புறம் லேகா கேட்டாரே ஒரு கேள்வி…. அடங்கப்பா!…திருக்குறலில்ன்னா என்ன? எனக்கு மீனிங் சொல்லணும் ( சத்தியமா நம்புங்க உச்சரிப்பு அப்படித்தான்) தமிழ்ல மீனிங் சொல்லுங்க.

கன்னியாகுமரி சிலை
திருக்குறள் விளக்கம்


திருக்குறளில்னா என்னா என்று கேட்டதற்காக… திருவள்ளுவர், திருக்குறள்.. கன்னியாகுமரி சிலை என்று விளக்கம் சொல்ல… ஓ… கண்ணம்மா… கண்ணம்மா என்று கேட்கிறார் லேகா… இது தவறு சொல்ல… எத்தனை பால் என்று ஆதவன் கேட்க… பால் பால்,தேன் பால் என்று சொல்கிறார் லேகா. அமலா பால் என்று முடிக்கிறார் ஆதவன்.

சரியா சொன்னாலும் தண்டனை
திருவள்ளுவரை மறக்கக் கூடாது

திருவள்ளுவரை பற்றியும், திருக்குறளை பற்றியும் கேவலப்படுத்தியற்காக சபரிக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அதெல்லாம் சரி.. இதெல்லாம் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காகவே மாற்றி சொல்வதா? அல்லது டிவி நடிகைகள் நிஜமாகவே தத்திகள்தான் என்று சொல்லாமல் சொல்கிறார்களா?

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!