அஜித்திற்கு சிபாரிசு செய்த கமல், செம்ம சுவாரஸ்ய தகவல் இதோ

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். தமிழ் திரையுலகில் அதிகமான ரசிகர்கள் வட்டத்தை வைத்துள்ளவர்களில் இவரும் ஒருவர்.

கடந்த வருடம் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தார். அதனை தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சரவணா சுப்பையா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சிட்டிசன்.

இப்படம் வெளியாகி இன்றுடன் 19 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், இதனை ட்விட்டரில் #19yrsofGOATcitizen என்ற ஹாஷ்டாக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

இப்படத்திற்காக (Anil pemgirkar) என்ற சிறந்த மேக்கப் மென்னை நடிகர் கமல் தல அஜித்திற்க்கு பரிந்துரை செய்துள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!