“தளபதி விஜய் அப்போவே சூப்பர் ஸ்டார் தான்” – பிரபல விஜய் பட நடிகை ஓபன் டாக்..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்த்திரமாகவும், வசூல் மன்னனாகவும் விளங்குபவர்.

சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அதன் பின் இவரின் நடித்த மாஸ்டர் திரைப்படமும் திரைக்கு வர தயாராகவுள்ளது.

இந்நிலையில் இவரின் நடிப்பில் கடந்த 2001ல் வெளியான திரைப்படம் ஷாஜஹான். இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தது குறித்து கதாநாயகி ரிச்சா பல்லோட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது “நான் தளபதி விஜய்யுடன் நடனமாட மிகவும் கஷ்டப்பட்டேன். விஜய் சார் அப்பவே சூப்பர் ஸ்டார் தான். இப்பொது மிக பெரிய சூப்பர் ஸ்டாராக மாறிவருகிறார்” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!