அவர்களாகவே தெரிஞ்சுதான் வர்றாங்க..!! இது வியாபாரம் அல்ல..!! லட்சுமி ராமகிருஷ்ணன் கறார்..!!


நடிகை, இயக்குனர் என்பதை தாண்டி தொகுப்பாளினியாக மிகவும் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி பல சர்ச்சைகள் வருவதுண்டு. நிகழ்ச்சியில் மக்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை உலகிற்கு காட்டி பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இதுபற்றி அவர் கூறுகையில், மருத்துவர் ஆலோசனை சொல்வது போல தான் நாங்கள் செய்கிறோம். ஆனால் இதை தொலைக்காட்சியில் போடுவோம் என்று எல்லாம் தான் தெரிஞ்சு தான் மக்கள் வருகிறார்கள். யாரையும் நாங்கள் கூட்டி வருவதில்லை. அவர்களாகவே தான் விரும்பி வருகிறார்கள் என்றார்.


*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மேலும் இதை வியாபாரம் என்று சொல்லாதீர்கள், மருத்துவர் நோயை குணப்படுத்த பணம் வாங்குவதால் அதை வைத்து வியாபாரம் செய்கிறார் என்று கொச்சைப்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவதற்காக சில இசையை சேர்த்து ப்ரோமா செய்கிறார்கள் என்பது உண்மை தான். இது தொண்டு நிறுவனம் அல்ல, நான் பணம் வாங்கிக்கொண்டு தான் நிகழ்ச்சி செய்கிறேன். ஆனால் சமூக பொறுப்போடு தான் இதை செய்கிறேன் என்றும் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!