ரஜினி, விஜய், அஜித்தை விட எனக்கு இந்த நடிகரை தான் ரொம்ப பிடிக்கும் – பிரபல தெலுங்கு நடிகர் ஓபன் டாக்..

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக திகழ்பவர். மேலும் இவர் நடிப்பின் நாயகன் என்றும் இவரது ரசிகர்களால் அழைக்கப்படுவார்.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் இவர் நடித்துள்ள சூரரை போற்று திரைப்படம் வெளியாகவிருக்கும் நிலையில், பெரிய எதிர்ப்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து இயக்குனர் ஹரியுடன் அருவா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ் ஒரு பேட்டியில் ரஜினி, கமல், விஜய், அஜித் இவர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் “எனக்கு நடிகர் சூர்யாவை தான் மிகவும் பிடிக்கும், இதனை நான் பல பேட்டியில் கூறியுளேன்” என பதிலளித்துள்ளார். மேலும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!