ஒரே ஒரு போன் கால்…. ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்த 11 பெண்களுக்கு உதவிய விஜய்

ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் தூத்துக்குடியில் சிக்கி தவித்த 11 பெண்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் மூலம் உதவியுள்ளார்.

சென்னையை சேர்ந்த தேவிகா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 11 பெண்கள் கடந்த மார்ச் மாதம் தூத்துக்குடிக்கு திருமணத்திற்காக சென்றிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் அவர்கள் அனைவரும் தூத்துக்குடியில் மாட்டிக்கொண்டனர். அவர்களில் தேவிகா தவிர மற்ற பெண்கள் அனைவரும் 20 வயத்துக்குட்பட்டவர்களாம்.

கையில் இருந்த பணம் சில நாட்களில் செலவான நிலையில், பின்னர் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்த அவர்கள், ஒரு கட்டத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். இதையடுத்து தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை சந்தித்து, அப்பெண்கள் தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

உடனடியாக அவர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவர் பிசி ஆனந்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்மூலம் இந்த விஷயம் விஜய்யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. விஜய் உடனடியாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை போனில் தொடர்பு கொண்டு, அந்த 11 பெண்களையும் சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அரசிடம் முறையாக அனுமதி பெற்று, அந்த 11 பெண்களும் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!