இது மட்டும் நடந்திருந்தால் இந்த கேள்வியே நீங்கள் என்னிடம் கேட்டு இருக்க மாட்டீர்கள், அஜித் ஓபன் டாக்

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து அஜித்துடன் யாருடன் கூட்டணி வைப்பார் என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வருகிறது.

சரி இது ஒரு புறம் இருக்க இன்னும் சில வாரங்களில் அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது, இதை அஜித் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாட தயார் ஆகி வருகின்றனர்.

தற்போது அஜித் சில வருடங்கள் முன்பு கொடுத்த பேட்டி ஒன்றை பார்ப்போம், இதில் அஜித்திடம் சினிமாவில் நல்ல உச்சத்தில் இருக்கும் போது ஏன் ரேஸை தேர்ந்தெடுத்தீர்கள் என கேட்டனர்.

அதற்கு அஜித் சிரித்துக்கொண்டே, ஆஞ்சநேயா படம் ஒன்று தோல்வி, ஒருவேளை அந்த படம் ஓடியிருந்தால் நீங்களே, எப்படி சார் சினிமா, ரேஸ் என்று கலக்குகிறீர்கள் என கூறுவீர்கள் என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!