மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் பெயர் இது தான், மாஸ்டர் பட நடிகரே கூறிய தகவல், இதோ..

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது உலக அளவில் மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக எப்போது வெளியாகும் என தெரியவில்லை.

மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாக்கி உள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் அப்டேடுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், தற்போது வரையில் இரண்டு பாடலின் லிரிக்கல் வீடியோ மட்டுமே வெளியாகியுள்ளது.

மேலும், சில தினங்களுக்கு முன் மாஸ்டர் படத்தின் பொளக்கட்டும் பர பர பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. அதில் நடிகர் விஜய் சேதுபதியின் கெட்டப் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் பெயர் என்னவாக இருக்கும் என்ற கேள்வி, மாஸ்டரில் நடித்த மகேந்திரன் “பவானி” என்ற பதிலை கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!