என் தம்பி விஜய் படத்தை போடுங்கள், அஜித்தே சொன்னார் இதை என்னிடம், பிரபலம் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகர் என்றால் விஜய், அஜித். இவர்கள் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் என்பது நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அது மட்டுமின்றி விஜய் தற்போது தன் திரைப்பயணத்தில் உச்சத்தில் இருக்கின்றார், அவர் என்ன படம் நடித்தாலும் பிரமாண்டமாக ஓடும் என்ற நிலையில் உள்ளார்.

இந்நிலையில் நேற்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் யாரும் எதிர்ப்பாராத விதமாக ‘என் நண்பர் அஜித் போல் உடையணிந்து வந்துள்ளேன்’ என கூறினார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் செம்ம வைரல் ஆனது, இதுபோல் அஜித் எப்போதாவது விஜய்யை கூறியுள்ளாரா என்று பலரும் கேட்டனர்.

உடனே அஜித் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு ஒரு வீடியோவை வைரலாக்க தொடங்கினர்.

இதில் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் ‘மங்காத்தா படத்தில் தியேட்டரில் ஒரு படம் ஓடுவது போல் காட்ட வேண்டும்.

அதற்கு என்ன படம் போடலாம் என்று நாங்கள் யோசித்து வந்த நிலையில், அஜித் சார் உடனே “என் தம்பி விஜய் படத்தை போடுங்கள்” என்றார்’ என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

எது எப்படியோ தலதளபதி ரசிகர்கள் இதை பார்த்தாவது அடித்துக்கொள்ளாமல் இருந்தார் சரி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!