மாஸ்டர் படத்தின் டீசர் இப்படித்தான் இருக்கும், விஜய் இதையெல்லாம் செய்வார், வெளிவந்த மெகா அப்டேட்

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அப்படியிருக்கையில் மாஸ்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் அதன் பிறகு வந்த அடுத்தடுத்த லுக் ரசிக்ரகளை வெகுவாக கவர்ந்தது.

இதை தொடர்ந்து குட்டி ஸ்டோரி, வாத்தி கமிங் பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஆல்பத்திற்கும், டீசருக்கும் தான் ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்.

அந்த வகையில் இந்த ஆல்பம் இந்த ஞாயிறு அன்று வெளிவர, டீசரும் மிக விரைவில் வரவுள்ளதாம்.

இதில் விஜய் மாணவர்களுக்காக போராடி, பழிவாங்கப்பட்டு அதற்காக குமுறி பேசும் வசனங்கள் தான் டீசரில் இடம்பெறும் என பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவருடைய யு-டியுப் சேனலில் கூறியுள்ளார்.

கண்டிப்பாக இந்த டீசர் சரவெடியாய் வெடிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!