தனுஷுடன் மோதும் நயன்தாரா? வெற்றி யார் பக்கம்

தமிழ் திரையுலகில் தலைசிறந்த நடிகர் நடிகை பட்டியலில் இவர்கள் பெயர் இல்லாமல் இருக்காது. ஆம் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா தான் அது.

தனுஷ் தற்போது நடித்து முடித்து ரீலிசுக்கு காத்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளிவந்திருந்தது. இந்த மோஷன் போஸ்டேரே பல தரப்பு ரசிகர்களை ஈர்த்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆம் அந்த அளவிற்க்கு மிக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்து.

ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.

அண்மையில் தான் இப்படத்தின் First லுக் வெளிவந்திருந்தது. இப்படம் வரும் summer-க்கு ரசிகர்களுக்கு விருந்தாக வரும் என்று நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷின் ஜகமே தந்திரம் மற்றும் நயத்தராவின் மூக்குத்தி அம்மன் படமும் ஒன்றாக மே மாதம் 1ஆம் தேதி வெளிவரும் என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!