சென்சேஷன் இயக்குனருடன் இணைகின்றாரா சிம்பு, விஜய்க்கு பதில் STR-ஆ?

ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து தற்போது சிம்பு மாநாடு படத்தில் கமிட் ஆகி, நடித்து வருகின்றார்.

அந்த படத்தின் படப்பிடிப்பில் எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல் சிம்பு, முழு ஒத்துழைப்பு தருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிம்புவிடம் இயக்குனர் மிஷ்கின் ஒரு கதை சொன்னதாக சில தகவல்கள் கிடைத்தது.

சிம்புவும் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க மிக ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆனால், அதை விட தற்போது சூப்பர் தகவலாக சிம்புவிடம் சூரரைப் போற்று இயக்குனர் சுதா ஒரு கதை சொன்னதாகவும் அது அவருக்கு மிகவும் பிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதா ஏற்கனவே விஜய்யிடம் ஒரு கதை கூறியிருக்கின்றார், ஆனால், விஜய் அதில் நடிக்கவில்லை என்பதால், தற்போது சிம்புவிடம் சுதா கதை கூறி ஓகே செய்துவிட்டார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

ஆனால், சிம்புவிற்கு சொன்ன கதை வேறு, விஜய்க்கு சொன்ன கதை வேறு என்பதே உண்மையாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!