விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒண்ணா வர சீன் இப்படி தான் இருக்கும்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறிய தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்து வருகிறார்கள்.

தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் முதலில் விஜய்யின் டப்பிங்கை முடித்துவிட்டு பின்னர் விஜய் சேதுபதியின் போஷனை முடிக்க திட்டமிட்டுள்ளாராம்.

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அண்மையில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மேடையில் பேசிய இவர் “இப்படத்தில் விஜய் அண்ணாவும் விஜய் சேதுபதி அண்ணாவும் ஒண்ணா வர சீன் செம Fire-ஆ இருக்கும்” என்று வெளிப்படையாக கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!