யுவன் கேரியரில் முக்கிய மைல்கல்.. ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறிய இசையமைப்பாளர்

இளையராஜா குடும்பத்தில் இருந்து வந்த இரண்டாவது தலைமுறை இசையமைப்பாளர் என்றாலும் தனக்கென தனி பாணி வகுத்து தற்போது கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

இவர் தற்போது தன் கேரியரில் 23 வருடங்கள் கடந்துள்ளார். இந்த மைல்கல்லை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இது பற்றி யுவன் உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “உங்கள் அன்பு தான் என்னை மேலே செல்ல ஊக்கமளித்தது” என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!