எந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத விஷயத்தை மீண்டும் செய்யும் டி. இமான், ரஜினி படத்திற்காகவா?

தளபதி விஜய் நடித்து வெளிவந்த தமிழன் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி. இமான்.

இதன்பின் பல படங்களில் இசையமைப்பாளராக பணிபுரிந்து வந்தார். முன்னணி நடிகர்கள் அஜித், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்தார்.

மேலும் தற்போது முதன் முறையாக சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து வரும் அண்ணாத்த படத்திற்கும் இவர் தான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் இசையமைத்த ஒரு சீறு எனும் படத்தின் மாற்று திறனாளி திருமூர்த்தி எனும் நபரை பாட வைத்தார். இதனை தொடர்ந்து மீண்டும் மாற்று திறனாளி இருவரை தனது படத்தில் பாட வைக்க முடிவெடுத்துள்ளார் இமான்.

இதை அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் டி.இமான். மேலும் இவரை ரஜினியின் படத்திற்கு தான் பாட வைக்க போகிறார் என்றும் சில தகவல்கள் கசிந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!