தெலுங்கில் வந்த 96 படம் இத்தனை கோடிகள் நஷ்டமா? பெரும் ஏமாற்றத்தில் சமந்தா

சமந்தா தமிழ் சினிமாவிலிருந்து தெலுங்குப்பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாகிவிட்டார். அப்படியே தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில் சமந்தா தற்போது நயன்தாரா போல் சோகோ ஹீரோயின் படங்களில் தான் அதிகம் நடித்து வருகின்றார், இல்லையென்றால் தனக்கு நல்ல ரோல் என்றால் நடிகர்களின் படங்களில் கமிட் ஆகின்றார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் யு-டர்ன், ஓ பேபி ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது, தமிழில் எடுத்தவரே தெலுங்கிலும் எடுத்தார்.

இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 21 கோடிக்கு விற்கப்பட்டதாம், ஆனால், இப்படம் தற்போது வரை ரூ 7 கோடி தான் ஷேர் வந்துள்ளதாம்.

இதனால் ஜானு படத்தின் மூலம் ரூ 14 கோடி வரை நஷ்டம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது, இவை சமந்தாவிற்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!