தனது கடின உழைப்பினால் முன்னேறி வந்தவர் விஜய், திட்டியவருக்கு பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை ரசிகர்கள் மத்தியில் சம்பாதித்து வைத்திருப்பவர் தளபதி விஜய்.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அண்மையில் நேர்காணல் ஒன்றில் விஜய் அவர்களை திட்டி ‘ஹிந்து மக்கள் கட்சி’ தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

இதனை குறித்து தற்போது பேசிய இயக்குனர் மு.களஞ்சியம் அவர்கள் “பொது தளத்தில் ஒரு பிரபலத்திற்கு மரியாதை கொடுத்து பேச வேண்டும் என்பது ஒரு நாகரிகம். அதனால் கூறுகிறேன் தனது கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்து வந்த நடிகர் விஜய்யை எப்படி நீ Fraud என்று கூறலாம். இது maturity உள்ள நபர் பேசுவதா, மூன்றாம் தர நபர் பேசுவது போல உள்ளது” என்று ஆதங்கத்துடன் பதிலதித்தார் களஞ்சியம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!