உலக அளவில் மிக பெரிய சாதனை செய்த ‘ஒரு குட்டி கதை’, விஜய்க்கு மட்டுமே சாத்தியம்.. முழு விவரம் இதோ

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் பற்றிய பேச்சு தான் இப்போது தமிழ் மக்களிடம் அதிகம். அதிலும் காதலர் தின ஸ்பெஷலாக இப்படத்தில் இடம்பெறும் குட்டி கதை பாடல் வெளியாகி இருந்தது.

இதில் வசனமும், விஜய்யும் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக பாட பாடலே செம டிரண்டிங்கில் உள்ளது. ஒவ்வொரு மணி நேரமும் பாடல் யூடியூபில் பல சாதனைகள் செய்கிறது.

5 நிமிடத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ், குறுகிய நேரத்தில் 1 மில்லியன் ஹிட்ஸ் என பல சாதனைகளை செய்திருந்தது.

தற்போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் குட்டி கதை பாடல் 3வது இடத்தை பிடித்துள்ளது.

இது ரசிகர்களுக்கு மேலும் கொண்டாட்ட செய்தியாக அமைந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!