விஜய்யின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று! ரசிகர்களின் கொண்டாட்டம்

தளபதி என ரசிகர்களால் அன்புடன் கொண்டாடப்படும் ஹீரோ விஜய் பாக்ஸ் ஆஃபிஸில் மன்னன் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

தீபாவளிக்கு வெளியான பிகில் படமும் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 250 கோடிகளை கடந்து வசூல் செய்தது. அடுத்தது வரும் ஏப்ரலில் வெளிவரவுள்ள அவரின் மாஸ்டர் படம் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

90 களில் அவரின் படங்களில் ரசிகர்களால் மிகவும் மறக்க முடியாத ஒன்று துள்ளாத மனமும் துள்ளும். விஜய்க்கு ஜோடியாக சிம்ரனும், வையாபுரி, பொன்னம்பலம், தாமு, மதன் பாப், மணி வண்ணன் என பலர் நடித்திருந்தனர்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் எல்லாமே ஹிட் ரகம் தான். எழில் இயக்கத்தில் இதே ஜனவரி 29 ல் வெளியாகிய இப்படம் தற்போது 21 ஆண்டுகளை எட்டிவிட்டது.

#21YearsOfEvergreenBlockbusterTMT என ரசிகர்கள் டேக் போட்டு கொண்டாடி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!