ஜெயலலிதா செய்த மிகப்பெரிய தவறு! பிரபல இயக்குனர் அதிரடி பேச்சு

சினிமாவில் நடிகையாக மிகுந்த உச்சத்தில் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 3 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் அவரின் மரணம் மர்மமான ஒன்றாகவே உள்ளன.

அண்மையில் இயக்குனர் அமீர் மாயநதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். இதில் அவர் ஜெயலலிதா மீது சில குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்தார்.

மேடை அவர், இன்னும் தமிழ் சினிமா முன்னேறவே இல்லை. காரணம் எம்,ஜி,ஆர், கருணாநிதி ஆட்சியில் சினிமா பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் சொல்லவே இல்லை.

அப்போதே சொல்லியிருந்தால் தற்போது சினிமா ஹாலிவுட் போல உருவாகியிருக்கும். கருணாநிதி முதல்வராக இருந்த போது தான் எம்.ஜி.ஆர் பெயரில் ஃபிலிம் சிட்டியை உருவாக்கினார்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது அதை ஜெ ஜெ ஃபிலிம் சிட்டி என பெயர் மாற்றினார். இது மிகப்பெரிய தவறு. அவர் அப்படி செய்திருக்கக்கூடாது. திரையுலகினர் அப்போதே பெயர் மாற்றக்கூடாது, நீங்கள் வேறு இடம் கொடுங்கள், புதிய நகரை உருவாக்கி அதற்கு உங்கள் பெயர் வைக்கலாம் என கோரிக்கை வைத்திருந்தால் நிச்சயம் செய்திருப்பார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!