எனக்கும் கற்றுகொடு என கேட்ட விஜய்.. அட்லீயின் துணை இயக்குனர் நெகிழ்ச்சி பேட்டி

தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் தற்போது மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

நடிகர் விஜய் அவர்களின் படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது சில விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவரும்.

அந்த வகையில் அண்மையில் கூட பிகில் படப்பிடிப்பில் இருந்து விஜய்யிடம் ஒருவர் மேஜிக் செய்து காட்டுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது. அந்த வீடியோவில் இருந்தது அட்லீயின் துணை இயக்குனர் கார்த்திகேயன் என்பவர்.

இவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில் “விஜய் அவர்கள் என் மேஜிக்கை பார்த்து விட்டு எனக்கும் கற்று கொடு என்று கேட்டார். மேலும் என் பிறந்தநாளின்போது விஜய் என்னை கட்டி பிடித்து வாழ்த்து கூறினார். என் வாழ்க்கையில் கிடைத்த மிக பெரிய moment இது” என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!