நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: ஆண்ட்ரியா வருத்தம்

ஆண்ட்ரியா
திருமணமான ஒரு பிரபலத்துடன் உறவில் இருந்ததாகவும், அதனால் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அது குறித்து புத்தகம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார் ஆண்ட்ரியா. அவர் எந்த பிரபலத்தின் பெயரையுமே குறிப்பிடவில்லை. இந்நிலையில் அது நடிகர்-அரசியல்வாதி என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினார்கள். மேலும் ஒரு பிரபல நடிகரின் பெயரும் அடிபட்டது. இந்நிலையில் இது குறித்து ஆண்ட்ரியா விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூர் விழா
பெங்களூரில் நடந்த இலக்கிய விழாவின் ஒருங்கிணைப்பு கமிட்டியில் என் தோழி அனுஜா சந்திரமவுலி இருந்தார். நான் எழுதுவேன் என்பது அவருக்கு தெரியும். அதனால் ஒரு எழுத்தாளராக வருமாறு அவர் என்னை அழைத்தார். கடந்த ஆண்டும் அழைத்தார்கள், நான் செல்லவில்லை. சரி பிரபஞ்சம் நான் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது என்று நினைத்து கலந்து கொண்டேன். அங்கு மீடியா இல்லை, எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தார்கள். அதனால் நான் ஒரு நடிகை என்பதை மறந்துவிட்டு பேசிவிட்டேன். நான் அப்படி செய்திருக்கக் கூடாது என்கிறார் ஆண்ட்ரியா.

மறந்துவிட்டேன்
ஒரு நடிகை என்பதை மறந்து நம் வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசினால் இப்படித் தான் ஆகும். நான் ஒரு புத்தகத்தில் இருந்து கவிதை வாசித்தேன். அப்பொழுது ஒருவர் அந்த கவிதை பற்றி கேட்க, அது என் வாழ்வில் இருந்த ரொம்ப சிக்கலான உறவு பற்றியது என்றேன். அது 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உறவு. அந்த கவிதை 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. நான் வாசித்த கவிதை பற்றி வேறுவிதமாக பேசினார்கள். அது குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவிட்டேன் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

புத்தக வெளியீடு
அந்த சம்பவத்தால் எனக்கு கோபம் வந்தது. மனதளவில் காயப்பட்டேன். நேர்மையாக இருந்தால் இப்படித் தான் நடக்கும் என்பதை புரிந்து கொண்டேன். அதனால் தான் அமைதியாக இருக்கிறேன். அந்த புத்தகத்தை நான் முறையே வெளியிடுவேன். அதை நான் வெளியிடுவதாக இருந்த நேரத்தில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த புத்தகம் ஒரு ஆணை பற்றி அல்ல. அது என்னை பற்றியது. என் முதல் காதல் முறிவு, கனவுகள் பற்றியது. நடிகர்-அரசியல்வாதி பற்றியது என கேள்விப்பட்டு வியந்தேன். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. நான் ஒரு நடிகை என்பதை மறந்துவிட்டேன் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!