ஓமைகாட், என்னால நம்பவே முடியல: துள்ளிக் குதிக்கும் த்ரிஷா, காரணம் யார் தெரியுமா?

த்ரிஷாவின் நீண்ட கால கனவு ஒன்று நிறைவேறிவிட்டது.

மோகன்லாலின் ராம்
பாபநாசம் படம் புகழ் இயக்குநர் ஜீத்து ஜோசப் மோகன்லாலை வைத்து மலையாள படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்திற்கு ராம் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ராம் படத்தில் மோகன்லால் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தில் மோகன்லாலின் பெயரும் ராம் தான். இந்திரஜித், சித்திக், சாய்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு
படப்பிடிப்பு இந்தியா தவிர்த்து இஸ்தான்புல், கெய்ரோ மற்றும் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த படம் மூலம் மோகன்லாலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற த்ரிஷாவின் நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது. ஹே ஜூட் படம் மூலம் மலையாள திரையுலகில் கடந்த 2018ம் ஆண்டு அறிமுகமானார் த்ரிஷா. இந்நிலையில் இரண்டாவது படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தவிர்த்து அவர் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளார்.

பேட்ட ரஜினி
ரஜினியுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று பல காலம் கூறி வந்த த்ரிஷாவின் ஆசை பேட்ட படம் மூலம் நிறைவேறியது. இதையடுத்து அவரின் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டிருக்கிறது. முன்னதாக த்ரிஷா நடிப்பில் வெளியான 96 சூப்பர் ஹிட் படத்தில் அவரின் காதலரான விஜய் சேதுபதியின் பெயர் ராம். அந்த ராமுடன் தான் சேரும் பாக்கியம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த ராமுடனாவது த்ரிஷா சேர்கிறாரா என்று பார்ப்போம். அடுத்தடுத்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாகியுள்ளார் த்ரிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

தம்பி
ஜீத்து ஜோசப் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோரை வைத்து எடுத்துள்ள தம்பி படம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. அண்ணி ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்துள்ளார். அதனாலேயே படத்தை பார்க்கும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. தம்பி பட ட்ரெய்லரை பார்த்தபோது கார்த்தி ஒரு ஃபிராடு என்பது தெரிகிறது. ஃபிராடுத்தனமான கதாபாத்திரங்களில் கார்த்தி அசத்தி விடுவார் என்பது சினிமா ரசிகர்களுக்கு நன்கு தெரியும். கைதி படத்தை அடுத்து வரும் தம்பியை பார்க்க ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!