என்னால முடியல: ஷங்கரிடம் புது கோரிக்கை விடுத்த கமல்

கமல் ஹாஸனின் இந்தியன் 2 படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் இந்தியன் 2. படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
.
இதையடுத்து அவர் ஓய்வில் இருந்தார். அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தால் சரியாக வராது என்று கமல் நினைக்கிறாராம். இதை அவர் ஷங்கரிடம் கூற அவரோ ஒன்னும் பிரச்சனை இல்லை, டூப் போட்டுக் கொள்ளலாம் என்றாராம்.

65 வயதாகும் கமல் டூப் போட விரும்புவது இல்லை. ஆனால் இம்முறை வேறு வழியில்லாமல் தான் ஷங்கரிடம் போய் டூப் போட்டுக்கலாமா என்று கேட்டிருக்கிறார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் உதவியாளரை டூப்பாக வைத்து சண்டை காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். இந்தியன் 2 குழு விரைவில் தைவானுக்கு செல்லவிருக்கிறது.

இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்குவதும் பின்னர் பிரேக் விடுவதுமாக இருந்தது. அதனால் தான் இந்த கால தாமதம். முன்னதாக பட்ஜெட் பிரச்சனை, தயாரிப்பு தரப்பு என்று பிரச்சனையாக இருந்தது. அது எல்லாம் ஒரு வகையாக தீர்ந்து தற்போது எந்த பிரச்சனையும் இன்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!