ஹைதராபாத் போலீசுக்கு சல்யூட், இது தான் நீதி: ராதிகா, முருகதாஸ், ஜெயம் ரவி பாராட்டு

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை சீரழித்து கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை திரையுலக பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

திஷாவுக்கு நீதி
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணி முடிந்து வீடு திரும்பிய 27 வயது கால்நடை மருத்துவரை நான்கு கொடூரன்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர். அதுவும் அந்த மருத்துவரை கொலை செய்த அதே இடத்தில் 4 பேரையும் போலீசார் கொன்றதை மக்களும், திரையுலக பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். அப்பகுதி மக்கள் என்கவுண்டர் செய்த போலீசார் மீது ரோஜா இதழ்களை தூவி வாழ்த்தியுள்ளனர்.

ஏ.ஆர். முருகதாஸ்
ஹைதராபாத் போலீசாருக்கு சல்யூட்..இந்த நாட்டில் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உணரும் நாளுக்காக காத்திருக்கிறேன் என்று இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ட்வீட் செய்துள்ளார். முருகதாஸ் மட்டும் அல்ல பொது மக்களும் ஹைதராபாத் போலீசாரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ராதிகா சரத்குமார்
அவர்கள் எளிதில் இறந்துவிட்டனர். திஷாவுக்கு நீதி…பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க கடினமான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார். அந்த 4 பேரையும் அடித்தே கொலை செய்ய வேண்டும் என்று பெண் எம்.பி.க்கள் உள்பட பலர் தெரிவித்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜெயம் ரவி
இதற்கு பெயர் தான் நீதி.. #JusticeForDisha என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு மக்கள் #JusticeForDisha என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங்
பலாத்காரம் போன்ற குற்றத்தை செய்துவிட்டு எவ்வளவு தூரம் ஓட முடியும்…நன்றி தெலங்கானா போலீஸ் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். தெலங்கானா போலீசை பாராட்டினாலும் அவர்கள் அந்த மருத்துவரின் பெற்றோரிடம் மோசமாக நடந்து கொண்டதையும் மறக்க முடியாது என்று சிலர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!