இவ்வளவு பெரிய நடிகருக்கு அப்பாவாக மாதவனா? ஷாக் ஆன திரையுலகம், உண்மை இது தான்

மாதவன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்தவர். இவர் சில வருடம் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில ஹிட் படங்களை கொடுத்தார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் நடித்த இறுதிச்சுற்று மற்றும் விக்ரம் வேதா ஆகிய இரண்டு படங்களும் தமிழில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் வருண் தேஜிற்கு அப்பாவாக மாதவன் நடிக்கின்றார் என்ற செய்தி பரவி வந்தது.

இதை பார்த்த மாதவனே ‘இது முற்றிலும் பொய், நான் இன்னும் சிறிய பையன்’ தான் என ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார்.

ஆனால், இந்த செய்தியை பார்த்த பலருக்கும் முதலில் ஷாக் தான், பிறகு மாதவன் பதிலை பார்த்ததும் தான் நிம்மதி ஆகினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!