விக்கி சொல்வதை பார்த்தால் நயனுக்கு இப்போதைக்கு திருமணம் இல்லையா?

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்தியுள்ளதை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நயன்தாரா தனது 35வது பிறந்தநாளை அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள மயாமி நகரில் தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். விக்னேஷ் சிவன் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன், அவர் வாழ்க்கையிலும், வேலையிலும் மேலும், மேலும் சாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா அடுத்தடுத்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார். இந்த சூழலில் விக்னேஷ் சிவன் வேறு இப்படி வாழ்த்தியிருப்பதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

நயன்தாராவுக்கு திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெறும் ஆசை உள்ளது. ஆனால் அதை உடனே நிறைவேற்றும் ஆசை தான் இல்லை என்று கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் கையால் தாலி வாங்க வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்படுவதை விட அவரின் ரசிகர்கள் தான் அதிகம் ஆசைப்படுகிறார்கள்.

நயன்தாரா ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் நயன்தாரா அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!