‘சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை…’: கஸ்தூரி ட்வீட்!

சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்பட வேண்டும் என்று கஸ்தூரி ட்வீட் வெளியிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சமீபத்தில் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

அவரின் சர்ச்சை கூறிய கருத்துக்கு எதிராக கண்டனம் எழுந்த நிலையில், அதற்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்தார். இருப்பினும் அந்த பிரச்சனை இன்னும் முடியாமல் அவர் மீது கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கஸ்தூரி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘குழந்தையின் கிறுக்கல்களை கூட பார்த்து, கண்விரித்து கைதட்டி கலையென்று மகிழ்வது தான் மனித இயல்பு. பிடித்து வைத்த மஞ்சளிலும் பிள்ளையாரை பார்ப்பது நம்பிக்கை. கோவில் சிலையில் கலைநயத்தை உணர நம்பிக்கை தேவையில்லை, கண்பார்வை இருந்தால் போதும். கம்யூனிஸ்ட் நாத்திக சீன அதிபருக்கு கூட ரசிக்க தெரிந்தது, இங்கு வன்மம் புடிச்ச சிலருக்கு அசிங்கமாக தெரிகிறது. அசிங்கம் பொம்மையில் இல்லை

சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக் கொண்டால்… தீவிர பக்தைகளா என்றால் அது தான் இல்லை. தீவிர விவாதிகள் , பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை , பாவம் ஐயப்பன் தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்!

புனித தலங்களை மதிக்க தெரியாத வக்கிரர்களுக்கு அங்கு நுழையும் உரிமை எதற்கு? சிலருக்கு கோவில் பிரவேசம் மறுக்கப்பட வேண்டும்- அது அவரின் பிறப்பினால அல்ல, அவரின் பிறவிக்குணத்தால்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!