அட்லி சூப்பர் ஸ்டார் இயக்குநர், விஜய் ப்ரில்லியன்ட்: பிகில் பார்த்து அசந்து போன கரண் ஜோஹர்

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கடந்த 25ம் தேதி ரிலீசானது.

என்ன தான் ஒரு பக்கம் கலவையான விமர்சனங்களைப் பிகில் படம் பெற்றாலும், வசூல் ரீதியாக உலகளவில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. தீபாவளி விடுமுறை நாட்களில் வெளியானதால் அனைத்து திரையரங்கிலும் ஹவுஸ் ஃபுல் ஷோவாக ஓடியது.

இந்த நிலையில் பிகில் படத்தைப் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும், பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கரண் ஜோஹர் பிகில் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

விஜய் டாப் ஃபார்மில் இருப்பதாக பாராட்டியுள்ள கரண் அட்லியை சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று புகழ்ந்துள்ளார். நடிகர் யாரையாவது சூப்பர் ஸ்டார் என்றால் தான் பிரச்சனை. இயக்குநரை கூறியதால் யாரும் சண்டைக்கு வர மாட்டார்கள்.

அட்லி கதையை சுட்டு பிகில் படத்தை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில் கரண் ஜோஹர் இப்படி பாராட்டியுள்ளது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

கரண் ஜோஹரின் இந்த வாழ்த்துக்கு பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி நன்றி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!