கவினை காப்பாற்ற லாஸ்லியாவிற்கு பிக் பாஸ் கொடுத்த டாஸ்க்.! தயங்கிய லாஸ்லியா!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக பைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார் முகென்.

அதனை தொடர்ந்து சேரன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

இந்த நிலையில் நாமினேஷன் பற்றி பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கேட்டார்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பிக் பாஸ் லாஸ்லியாவிடம் நீங்கள் யாரை காப்பாற்ற போகிறீர்கள் என்று கேட்கிறார்.
லாஸ்லியா, கவினை காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுகிறார். அதற்கு பிக் பாஸ் ஒரு நிபந்தனை விதிக்கிறார்.

அதாவது லாஸ்லியாவிற்கு முன் ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய் வைக்கப்பட்டு உள்ளது. ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டால் கவினை காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் கூறுகிறார்.

கவினுக்காக லாஸ்லியா ஒரு பச்சை மிளகாயை சாப்பிட தொடங்குகிறார். முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பாரா கவினை காப்பாற்றுவாரா என்பது பொறுத்தது இருந்து தான் பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.