வனிதாவை கமல் நோஸ்கட் செய்த போதெல்லாம் கைதட்டி ரசித்த இந்த பெண்மணி யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தர்ஷன், ஷெரினின் நட்பை வனிதா கேவலமாக பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் கோபப்பட்டதால் ஷெரினுக்கு ஆதரவு குவிந்து அவர் காப்பாற்றப்பட்டார்.

நேற்று கமல்ஹாசன் வனிதாவை நோஸ்கட் செய்த போதெல்லாம் மற்ற ரசிகர்களையும் தாண்டி ஒரு பெண்மணி ஆரவாரமாக கைத்தட்டி ரசித்தார்.

அந்த பெண்மணி யார் தெரியுமா? அவர் தான் ஷெரினின் அம்மா. கடந்த வார எவிக்ஷனில் ஷெரின் இருந்ததால் அவர் வெளியேற்றப்படலாம் என்பதால் அவரின் தாயார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பார் என கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.