நடிகை வரலக்ஷ்மியா இது.! எப்படி இருக்காங்க பாருங்களே.. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!


தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் நடிகர் சரத்குமாரின் மகளான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலம் தமிழ் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை திரைப்படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான சர்க்கார், மாரி 2 , சண்டக்கோழி 2 போன்ற மிக பெரிய படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் சற்று உடல் எடை அதிகரித்திருந்த வரலக்ஷ்மி தற்போது தனது உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். மேலும் தற்போது ஒரு சில படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் வரக்ஷ்மியின் குழந்தைபருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.