நம்பர் நடிகை இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாரா..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!


நடிகையாகி 15 வருடங்கள் ஆனாலும், இன்றைக்கும் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார் பெரிய நம்பர் நடிகை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சமூகக் கருத்துள்ள படம், இவருடைய மார்க்கெட்டை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. பொதுவாக, தான் நடிக்கும் எந்தப் படங்களின் புரமோஷனிலும் கலந்து கொள்ள மாட்டார் நம்பர் நடிகை. சமீபத்தில் வெளியான படத்திற்கு மட்டும், மூன்று தியேட்டர்களுக்கு விஸிட் அடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்நிலையில், சிவ நடிகர் ஜோடியாக அவர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதிலாவது அவர் கலந்து கொள்வாரா இல்லை வழக்கம்போல டேக்கா கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!