லாசு மாதிரி பேசினு இருக்காரு.! மீண்டும் சேரனை வம்பிற்கு இழுக்கும் சரவணன்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு லக்ஸரி பட்ஜெட்டிற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் நேற்றைய டாஸ்கில் போட்டியாளர்களுக்கு மொட்டை கடுதாசி என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடுதாசி மற்ற போட்டியாளர்களை கேட்க விரும்பும் கேள்வியை கேட்கலாம் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது கவினுக்கும் சாக்க்ஷிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. அதே போல கவினுடன் ஒப்பிட்டு பேசியதால் லாஸ்லியாவும் சாக்க்ஷி மீது கோபம் கொண்ட லாஸ்லியா, சாக்க்ஷியிடம் கொஞ்சம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டது பலருக்கும் வியப்பாகவே இருந்தது.

இந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் இந்த வாரம் டாஸ்கில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள், யார் மோசமாக செயல்பட்டார்கள் என்று போட்டியாளர்கள் கருத்து தெரிவித்த போது சேரன், சரவணின் பெயரை மோசமாக டாஸ்க் செய்தார் என்று கூறிவிட கடுப்பான சரவணன், சேரனை மரியாதை குறைவாக பேசியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.