கவின் குறித்து மோசமாக ட்வீட் செய்த காமெடி நடிகர் சதீஷ்.!

கவினை கலாய்ப்பது போல அசிங்கப்படுத்தியுள்ளார் பிரபல நடிகரான சதிஷ். அந்த ட்வீட் தற்போது சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கவின் எந்நேரமும் பெண்கள் பின்னாடியே சுற்றி கொண்டிருப்பது ஏற்கனவே விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது காமெடி நடிகரான சதிஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எந்நேரமும் பாத்ரூமில் இருப்பது எது? என கேள்வி கேட்டு ட்வீட் செய்துள்ளார்.

மேலும் அந்த கேள்விக்கு மூன்று ஆப்ஷன்களையும் கொடுத்துள்ளார். அதில் பேஸ்ட், பிரஷ் மற்றும் கவின் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் இதற்கு கவின் தான் என பதிலளித்து அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.