தளபதியின் மெர்சல் உண்மையில் எத்தனை கோடி நஷ்டம்னு தெரியுமா..?


தளபதி நடிப்பில் மெர்சல் படம் திரைக்கு வந்து பிரமாண்ட வெற்றியை பெற்றுவிட்டது. இப்படத்தின் மூலம் அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் நல்ல லாபம் தான் கிடைத்துள்ளது. இதை அவர்களே கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் எஸ்.வி.சேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் என்று கூறியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி ரூ. 40 கோடி நஷ்டம் என்றார், ஆனால் எஸ்.வி.சேகர் ரூ. 60 கோடி நஷ்டம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதுநாள் வரை எந்த ஒரு விநியோகஸ்தர்களும் மெர்சல் நஷ்டம் என்று கூறியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!