அஜித் படத்தின் ஃபஸ்ட் லுக் கெட்டப், ஹீரோயின் பற்றிய தகவல் வெளியானது..!!


தல நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றாலும் கலவையான விமர்ச்சனங்களை பெற்றது. இதனால் மீண்டும் சிவாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

தல ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் விதமாக யாரும் எதிர்ப்பார்க்காதப்படி அஜீத்தின் அடுத்தப்படத்தின் தலைப்பு ‘விசுவாசம்’ என்று வைத்துள்ளனர்

தல அவருக்கென ஒரு பாணியை வைத்திருக்கிறார். அதன் மீது கவனம் செலுத்தி கொண்டே அவர் பயணம் செய்கிறார். ரசிகர் மன்றமே வேண்டாம். சமூக வலைதளம் வேண்டாம் என சோலோ நடை போட்டு வருகிறார்.


சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக புதுப்படம் தயாராக இருக்கிறது. ரசிகர்களிடம் எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தாமல் படக்குழு இப்படத்தின் பெயர் விசுவாசம் என்று அதிரடியாக வெளியிட்டனர்.

இதுவரை படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அது என்னவென்றால் இதுவரை சால்ட் அன் பெப்பர் லுக்கில் நடித்த தல இப்படத்திற்காக கருப்பு நிற தலைமுடியில் நடிக்க இருக்கிறாராம். அதோடு விவேகம் படத்தை விட இப்படத்தில் எடையை இன்னும் குறைக்க இருக்கிறாராம். ஃபஸ்ட் லுக்கில் புதுவித லுக்கில் அஜித் இருப்பார் என்று தெரிகிறது.


மேலும், இப்படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது, ஆனால், இறுதியாக அனுஷ்காவை ஹீரோயினாக கமிட் செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!