பிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகர் கவின் முழு விபரம்

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விட்டது. இன்று முதல் பிக்பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. பிகபாஸ் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து விட்டார்கள்.

https://www.instagram.com/p/Byc4FvzBMN9/

திருச்சியில் பிறந்த கவின் படிப்பை முடித்ததும் கிடைத்த ரேடியோ ஜாக்கி வேலையும், தொடர்ந்து டிவி தொடர், நிகழ்ச்சிகளில் கிடைத்த வாய்ப்பின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

டிவி தொடர்களில் ஹிரோவாக நடித்து புகழ் பெற்றவர். விஜய் டிவி தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து புகழ் பெற்றவர். சரவணனாக இவர் நடிப்பு கிராமங்களிலும் இவருக்கான ரசிகர்களை உருவாக்கியது. பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம். டீவித் தொடர்கள் மூலம் புகழ் பெற்ற பின் சினிமாவில் “நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் மூலம் ஹிரோவானார். இப்படம் மூன்று வருடங்கள் தயாரிப்பு பிரச்சனைகளில் சிக்கி மிகச் சமீபத்தில் ரிலீஸ் ஆனது.

https://www.instagram.com/p/BvOQfy-gFeS/

“நட்புண்ணா என்னன்னு தெரியுமா” படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நேற்று அவருக்கு பிறந்த நாள் பிறந்த நாளில் முதல் ஆண் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.

விஜய் டிவியில் கனாகானும் காலங்கள் 2011-2012 தொடங்கி, தாயுமானவன், சரவணன் மீனாட்சி, சரவணன் மீனாட்சி சீசன் 2 என வரிசையாக பல தொடகளில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/BuL4dCfAnaf/

கவினுக்கு சீசியலில் ஒருபக்கம் என்றால் திரைத் தேடல் மறுபக்கமாக உள்ளது. அவர் பீட்சா, இன்று நேற்று நாளை படங்களில் கெளரவத் தோற்றத்திலும், சத்ரியன், நட்புன்னா என்னா தெரியுமா உள்ளிட்ட படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.