ஒரு நாளைக்கு 25 லட்சம் சம்பளம் கொடுத்தால் பிக்பாஸிற்கு வருகிறேன்! கண்டீஷன் போட்ட பிரபல நடிகர்!

இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு , கன்னடா என பல மொழிகளில் ஒளிபரப்படுகிறது. தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி படு பேமஸான அந்நிகழ்சியை தெலுங்கில் நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டது.

இதற்குமுன் நானி தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது ஸ்ரீரெட்டியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், ஸ்ரீரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என்று நானி கூறிவிட்டார்.

இந்நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் விரைவில் துவங்குகிறது. அதில் பங்கேற்க பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சுனில் என்பவரை அணுகியுள்ளனர். அதற்கு அவர் தனக்கு ஒரு நாளுக்கு மட்டும் 25 லட்சம் கொடுத்தால் பிக்பாஸ்க்கு வருகிறேன் என அதிரடியாக கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.