“மிடில் கிளாஸ் இரவில் ஐடி வேலை, பகலில் படப்பிடிப்பு! ஓய்வின்றி ஓடிய சீரியல் நடிகர்

அரண்மனை கிளி, பூவே பூச்சூடவா என டாப் சீரியல்களில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் சந்தோஷ் டேனியல். சென்னை வாலிபரான இவர் இந்த துறைக்கு வருவதற்கு சந்தித்த கஷ்டங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், மிடில் கிளாஸ் குடும்பம். கூடவே சினிமா ஆசை. எனக்கு சினிமா லின்க் கிடையாது. யாரையும் தெரியாது. அதனால் அந்த ஆசைகளை கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு ஒரு ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.

அப்புறம் என் நண்பர் ஒருவர் மூலமாக சீரியல் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. இருந்தாலும் ஐடி வேலையை விட கூடாது என்பதற்காக இரவெல்லாம் நைட் ஷிஃப்ட் பார்ப்பேன். காலை 6.30 மணிக்கு ஷிஃப்ட் முடியும். கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன். அப்பறம் ஷூட்டிங் போய்டுவேன். இப்படியே போச்சு.

ஒரு கட்டத்துல உடம்பு ஒத்துழைக்கலை. நிறைய ஹெல்த் பிரச்னை வந்துச்சு. அதனால் ஐடி வேலையை விட்டுடலாம்னு துணிந்து முடிவு எடுத்தேன். அப்புறம் நிறைய கஷ்டம் வந்துச்சு. ஏழு வருஷம் நிறைய நிறைய கஷ்டங்கள். ஒவ்வொரு வாய்ப்புக்கும் அலைந்தேன். அவ்வளோ கஷ்டத்துக்கு பிறகுதான் இந்த டாப் சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது என்கிறார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.