ரட்சிதாவுடன் புதிய சீரியலில் வருகிறேன்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பூவே பூச்சூடவா தினேஷ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பூவே பூச்சூடவா சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவரும், சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதாவின் கணவருமான தினேஷ் திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார்.

அவருக்கு பதிலாக சன் டிவி சீரியலில் நடித்து வந்த நடிகர் கமிட்டாகியுள்ளார். இருப்பினும் தினேஷ் தான் இந்த சீரியலுக்கு செட்டானார், அவர் தான் எங்களுக்கு பிடித்திருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.

அதுமட்டுமின்றி, மீண்டும் சீரியலுக்கு வாருங்கள் என்று குறிப்பிட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகியது குறித்து தினேஷ் கூறுகையில், இந்த சீரியல் மூலம் எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். பக்கத்து வீட்டு பையன் போன்று பார்த்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/BxH106HBAl-/

ரசிகர்கள் பலரும் அந்த சீரியலில் வரும் என்னுடைய பெயரான சிவா ஏன் எங்களை ஏமாற்றீனீர்கள்? உங்களின் இடத்தை நீங்கள் தான் நிரப்ப முடியும் என்று கூறி வருகின்றனர்.

அவர்களின் அன்புக்கு என் அன்பையே பரிசாகக் கொடுக்க நினைக்கிறேன். ஒரு நடிகனாக ‘சிவா’ கதாபாத்திரம் எனக்குக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு, நான் சீரியலில் இருந்து விலகியதற்கு முக்கிய காரணம் நான் புதிதாக எடுத்துக்கொண்ட வேலையும், அதில் எனக்கு ஏற்பட்ட வேலைச் சுமையுமே, உங்களை மகிழ்விக்கும் கேரக்டரில் விரைவில் வருவேன்.

https://www.instagram.com/p/BxO5yR9B5hp/

நானும் என் மனைவியும் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிற ஒரு சீரியலில் ஜோடியாக நடிக்கிறோம். அந்த சீரியலின் கிரியேட்டிவ் ஹெட் நான்தான்.

இந்தமாத இறுதிக்குள் அந்த சீரியல் ஒளிபரப்பாகும். எப்போதும்போல ரசிகர்களாகிய உங்களின் பேராதரவைத் தருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு பயணிக்கிறோம் என்று கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.