கேரளா உடையில் இருக்கும் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

நடிகை அமலா பால் கேரளா உடையில் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து, நிமிர்ந்து நில், தலைவா, பசங்க 2, வேலையில்லாத பட்டதாரி, வேலையில்லாத பட்டதாரி 2 என்று பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில், இவரது நடிப்பில் ராட்சசன் படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.

https://twitter.com/Amala_ams/status/1130000265539493888

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது, தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். மேலும் ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/BxukIiRAeVt/?utm_source=ig_embed

இந்த நிலையில், அமலா பால் கேரளா சேலையில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்க்கும் பெண்கள் பலரும் பொறாமை படும் அளவிற்கு இந்த புகைப்படம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Amala_ams/status/1131910521697914881


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.